ADDED : பிப் 01, 2024 10:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மாவட்ட சுகாதார பேரவைக்கூட்டம் நடந்தது. இதில் 182 தீர்மானங்கள் மாநில பேரவைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக அரங்கில் டி.ஆர்.ஓ., கோவிந்தராஜூலு தலைமையில் கூட்டம் நடந்தது. சுகாதாரதுணை இயக்குநர் அர்ஜூன்குமார், சுகாதார இணை இயக்குநர் சகாயஸ்டீபன்ராஜ், டாக்டர் இந்திரா, தொழுநோய் பிரிவு துணை இயக்குநர் ரவிச்சந்திரன் உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.
பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. சுகாதார நலப்பேரவை சார்பில் 481 தீர்மானங்கள் எழுப்பப்பட்டு 182 தீர்மானங்கள் மாநில சுகாதார பேரவைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

