ADDED : ஜன 19, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: த.மு.மு.க., மற்றும் ம.ம.க., மாவட்ட செயற்குழு கூட்டம் சாயல்குடியில் நடந்தது. மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சம்சுகனி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது வரவேற்றார்.
மாநில தலைமை பிரதிநிதி சம்சுதீன், மாநில செயற்குழு உறுப்பினர் முகமது முகிதுல்லா பங்கேற்றனர். பிப்.,6, 7ல் சென்னையில் நடக்கும் மாநில செயற்குழு கூட்டம், மாவட்டத்தில் புதிய கிளை அமைப்பது, மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

