/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் திராவிட மாடல் அரசு வேலுார் இப்ராஹிம் பேட்டி
/
தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் திராவிட மாடல் அரசு வேலுார் இப்ராஹிம் பேட்டி
தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் திராவிட மாடல் அரசு வேலுார் இப்ராஹிம் பேட்டி
தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் திராவிட மாடல் அரசு வேலுார் இப்ராஹிம் பேட்டி
ADDED : ஜன 23, 2024 04:11 AM
ராமநாதபுரம்: -தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் செயலில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருவதாக பா.ஜ.,சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் ராமர் பிரதிஷ்டை விழா நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர் கூறியதாவது:
அயோத்தி ராமஜென்ம பூமியில் பிராண பிரதிஷ்டை விழா கும்பாபிேஷக விழா பிரதமர் மோடி முன்னிலையில் நடந்துள்ளது. தமிழகத்தில் மத நல்லிணக்கம் நிலவ வேண்டும். பழைய மன கசப்புகளை மறந்து அனைவரும் பாரதத் தாயின் பிள்ளைகளாக அனைவரும் சேர்ந்து அகல் விளக்கு ஏற்ற வேண்டும், என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
அதன்படி கோயில்களிலும், தர்காக்களிலும், சர்ச்களிலும் அகல் விளக்கு ஏற்றப்படுகிறது. 500 ஆண்டு கால போராட்டத்தில் ஹிந்து மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. முகலாயர்கள் படை எடுப்பால் அழிக்கப்பட்ட பாரதத்தின் கலாசாரத்தை பிரதமர் மோடி நிலை நாட்டி இருக்கிறார்.
இந்நிகழ்வில் முஸ்லிம்களும் பங்கேற்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். மத நம்பிக்கைக்கு எதிராக நடக்கிற திராவிட மாடலை நடத்துகிற ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு எதிர்வினை ஆற்றி வருகிறது. கோயில்களில் நடக்கும் நேரடி ஒளிபரப்பிற்கு காவல்துறை மூலம் நெருக்கடி கொடுத்து கொண்டிருக்கிறது.
தமிழக காவல் துறை தடுப்பதும், கைது செய்ய முயல்வதும் நெருக்கடியை அதிகரித்து வருகிறது.
இங்கு மத நல்லிணக்கத்தை கெடுப்பதற்கு தி.மு.க., ஆட்சி செயல்படுகிறதா. ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்ற எந்த பாகுபாடும் கிடையாது என்றார்.

