/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துார் பகுதியில் விடாத மழையால் மாணவர்கள் சிரமம்
/
முதுகுளத்துார் பகுதியில் விடாத மழையால் மாணவர்கள் சிரமம்
முதுகுளத்துார் பகுதியில் விடாத மழையால் மாணவர்கள் சிரமம்
முதுகுளத்துார் பகுதியில் விடாத மழையால் மாணவர்கள் சிரமம்
ADDED : ஜன 10, 2024 12:08 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் பகுதியில் விடாமல் பெய்த மழையால் பள்ளி மாணவர்கள் மதிய உணவுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
முதுகுளத்துார் சுற்றியுள்ள வெண்ணீர்வாய்க்கால், வெங்கலக்குறிச்சி, பொசுக்குடி, ஆத்திகுளம், கீரனுார், நல்லுார், ஏனாதி, கிடாத்திருக்கை, கொண்டுலாவி, பூக்குளம், சித்திரங்குடி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் முதுகுளத்துாரில் உள்ள தனியார், அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர்.
இதில் முதுகுளத்துார்--பரமக்குடி சாலை ஆற்றுப்பாலம் அருகிலும், முதுகுளத்துார்--கமுதி சாலை அரசு போக்குவரத்து பணிமனை அருகே அரசு மாணவர்கள் விடுதியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.
நேற்று காலை 7:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மழை விடாமல் பெய்தது.
இதனால் பள்ளி உணவு இடைவேளையின் போது மாணவர்கள் மதிய உணவு சாப்பிட செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். ஒரு சில மாணவர்கள் பள்ளியில் தங்கி உள்ளனர்.வீட்டிற்கு செல்லும் மாணவர்கள் நனைந்தபடி சென்றனர்.
இதனால் உள்ளூர், வெளியூர் மாணவர்கள் சிரமப்பட்டனர். பேரூராட்சியில் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது.

