
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேல்பனையூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் பி.டி.ஓ., உம்முல் ஜாமியா, சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் பானைக்கு தீ மூட்டியதிலிருந்து பொங்கல் பானையில் அரிசி, வெல்லம், மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் பானையில் இட்டு அனைவருக்கும் பொங்கல் தயார் செய்து அசத்தினார்.
இஸ்லாமிய பெண் அதிகாரி பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு, பெங்கல் தயார் செய்ததை அப்பகுதி மக்கள் குலவையிட்டு பெண் அதிகாரிக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு குழு வட்டார தலைவர்கள் மோகன், நாகமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
---

