/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குறைவான பஸ்கள் இயக்கம் காத்திருந்து பயணிகள் அவதி
/
குறைவான பஸ்கள் இயக்கம் காத்திருந்து பயணிகள் அவதி
ADDED : ஜன 19, 2024 04:37 AM
திருவாடானை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவித்த நிலையில் குறைவான பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் மாலை முதல் திருவாடானை, தொண்டி பகுதியிலிருந்து ஏராளமானோர் கோவை, திருப்பூர், சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லத் துவங்கினர்.
அதே போல் நகரங்களில் தங்கி படிக்கும் மாணவர்களும் பள்ளிகளுக்கு செல்லத் தயாராயினர். இந்நிலையில் திருவாடானை, தொண்டி பஸ்ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அதிகமானது. ஆனால் திருச்சி-ராமேஸ்வரம், மதுரை- தொண்டிக்கு செல்லும் வழக்கமான பஸ்களும் வராமல் குறைவான பஸ்கள் இயக்கப்பட்டன.
போக்குவரத்து அலுவலர் கூறுகையில், திருச்சி, மதுரையிலிருந்து சென்னைக்கு செல்லும் வகையில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் சில ஊர்களுக்கு செல்லும் வழக்கமான பஸ்கள் நிறுத்தப்பட்டு சிறப்பு பஸ்களாக இயக்கப்பட்டன என்றனர்.
குறிப்பிட்ட நேரத்தை விட தாமதமாக வந்த பஸ்களில் பயணிகள் முண்டியடித்து ஏறினர். குழந்தைகளுடன் சென்ற பெண்கள் அவதிப்பட்டனர்.

