/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பஸ்-- சரக்கு ஆட்டோ மோதி விபத்து: 7 பேர் காயம்
/
அரசு பஸ்-- சரக்கு ஆட்டோ மோதி விபத்து: 7 பேர் காயம்
அரசு பஸ்-- சரக்கு ஆட்டோ மோதி விபத்து: 7 பேர் காயம்
அரசு பஸ்-- சரக்கு ஆட்டோ மோதி விபத்து: 7 பேர் காயம்
ADDED : ஜன 14, 2024 04:13 AM
தொண்டி : தொண்டி அருகே அரசு பஸ்- சரக்கு ஆட்டோ நேருக்கு மோர் மோதியதில் 7 பேர் காயமடைந்தனர்.
பட்டுக்கோட்டையிலிருந்து ராமநாதபுரத்தை நோக்கி அரசு பஸ் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றது. அப்போது தொண்டியிலிருந்து எஸ்.பி.பட்டினம் நோக்கி சரக்கு ஆட்டோ சென்றது. இந்த ஆட்டோவில் மூன்று பேர் பயணம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு எம்.ஆர்.பட்டினம் அருகே இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் பஸ் டிரைவர் ராமநாதபுரத்தை சேர்ந்த கண்ணன் 40, கண்டக்டர் ரமேஷ் 35, ஆகியோரும், சரக்கு ஆட்டோ டிரைவர் வேலங்குடியை சேர்ந்த பொன்னரசு 45, மற்றும் பஸ்சில் பயணம் செய்த சிறுவன் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.
அனைவரும் தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

