/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மகிழ்ச்சியும் வேதனையும் அடைந்த விவசாயிகள்
/
மகிழ்ச்சியும் வேதனையும் அடைந்த விவசாயிகள்
ADDED : ஜன 09, 2024 11:59 PM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நேற்று பெய்த கனமழை சில பகுதிகளில் விவசாயத்திற்கு ஏற்றதாகவும், சில பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியும், கவலையும் தெரிவித்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் 22 ஆயிரத்து 500 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆனந்துார், கருங்குடி, ஆயங்குடி, திருத்தேர்வளை, கூடலுார், நத்தக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன.
கனமழையால் இங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் ஆர்.எஸ்.மங்கலத்தை ஒட்டியுள்ள சோழந்துார், மங்கலம், இருதயபுரம், கொத்தியார்கோட்டை, கருங்குடி, காவனுார், துத்தியேந்தல் திருப்பாலைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மழையால் ஒரு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில் ஒரு பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

