/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உயர்கோபுர மின் விளக்கு பராமரிப்பு
/
உயர்கோபுர மின் விளக்கு பராமரிப்பு
ADDED : செப் 17, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அரசு மருத்துவமனை முன்புள்ள உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்கப்பட்டது.
முதுகுளத்துார் பேரூராட்சி சார்பில் அரசு மருத்துவமனை முன்பு சில ஆண்டுகளுக்கு முன்பு சோலார் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது.
அரசு மருத்துவமனை என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடமாக இருப்பதால் உயர்கோபுர மின்விளக்கு பயனுள்ளதாக உள்ளது.
சில நாட்களாக உயர்கோபுர மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இருளில் மூழ்கியது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக உயர்கோபுர மின்விளக்கு பராமரிப்பு செய்யப்பட்டு தற்போது எரிவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

