/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வைகை ஆற்றில் வளர்ந்துள்ள நாணல் புற்கள்; தூர்வாரி ஆற்று கால்வாய்கள் புதுப்பிக்கப்படுமா

ADDED : ஜன 24, 2024 05:19 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வைகை ஆற்றில் பொதுப்பணித்துறையினர் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் நாணல் புற்கள் வளர்ந்து புதர் மண்டியதால் வைகை ஆற்றில் நீர் வரத்து பாதிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் வைகை பாசனத்தின் கடை மடைப்பகுதியாக உள்ளது.
ராமநாதபுரம் பெரிய கண்மாய், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்
மூலம் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பார்த்திபனுார் மதகணையில் இருந்து திறக்கப்படும் வைகை அணை நீர் வரும் ஆற்றுப்பகுதி முழுமையாக பொதுப்பணித்துறையினரால் பராமரிக்கப்படவில்லை.
ஒவ்வொரு முறை வைகை ஆற்றில் நீர் வரும்போதும் இது போன்ற நாணல் புற்கள் புதர்களாக இருப்பதால் நீர் வரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது. விவசாய பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் சென்றடைவதில்லை. ராமநாதபுரம் வைகை ஆறு குறித்து
பொதுப்பணித்துறையினர் எந்த அக்கறையும் காட்டுவதில்லை.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில்
இருந்து திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக ராமநாதபுரம்
பெரிய கண்மாய்க்கும், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கும் சென்றடைவதில்லை. இதனால் குறைவான நீர் வரத்தால் பாசன
பகுதிகள் முழுமையாகப் பாதிக்கப்படுகிறது.
இனி வரும் காலங்களிலாவது வைகை ஆற்றை துார்வாரி, புதர்களை அகற்றி பராமரிப்பு பணிகளை செய்வதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட வேண்டும்.
---