/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிப்., 26 முதல் காலவரையற்ற ஸ்டிரைக் ஜாக்டோ- - ஜியோ முதல்வருக்கு கடிதம்
/
பிப்., 26 முதல் காலவரையற்ற ஸ்டிரைக் ஜாக்டோ- - ஜியோ முதல்வருக்கு கடிதம்
பிப்., 26 முதல் காலவரையற்ற ஸ்டிரைக் ஜாக்டோ- - ஜியோ முதல்வருக்கு கடிதம்
பிப்., 26 முதல் காலவரையற்ற ஸ்டிரைக் ஜாக்டோ- - ஜியோ முதல்வருக்கு கடிதம்
ADDED : ஜன 21, 2024 07:34 AM
ராமநாதபுரம் : பிப்.,26முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஜாக்டோ- -ஜியோ அமைப்பினர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது: ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 10 லட்சம் உறுப்பினர்களை கொண்டது. தொடர்ந்து 20 ஆண்டுகளாக எங்களது வாழ்வாதார உரிமைகளுக்காக போராடி வருகிறோம்.
அ.தி.மு.க.,. ஆட்சியின் போது எங்களது உரிமைகளும், சலுகைகளும் நிறுத்தி வைக்கப்பட்டும், பறிக்கப்பட்டும் வந்துள்ளன.
எதிர்க்கட்சியாக நீங்கள்இருந்த போது நீங்கள் கொடுத்த ஊக்கம் காரணமாகவும்,வாக்குறுதியாலும் உங்களுக்கு அரசு ஊழியர்கள் ஆதரவுதெரிவித்தனர். நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் கொரோனாவால் பாதிப்பில் தமிழகம் இருந்ததால் எங்கள் கோரிக்கைகள் குறித்து நாங்கள்வலியுறுத்தவில்லை.
தற்போது மூன்றாண்டுகளாகியும் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றாததால் தற்போது போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எனவே ஜன.22 முதல் 24 வரை மாநிலம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர், அரசு ஊழியர் சந்திப்பு பிரசாரம் நடத்தப்படும். ஜன.30 ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல் செய்வது. பிப்.5 முதல் 9 வரை பா.ஜ., அ.தி.மு.க., தவிர்த்து மற்ற அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவுகேட்க உள்ளோம்.
பிப்.10 ல் வேலைநிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு நடத்தப்படும். பிப்.15 ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்நடைபெறும். பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

