/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் வெளிநடப்பு
/
கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் வெளிநடப்பு
கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் வெளிநடப்பு
கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் வெளிநடப்பு
ADDED : ஜன 14, 2024 04:10 AM
கீழக்கரை : கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.
நகராட்சி கூட்டத்திற்கு தலைவர் செகனாஸ் ஆபிதா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார்.
கமிஷனர் செல்வராஜ் வரவேற்றார். தீர்மானங்களை கணக்காளர் தமிழ்செல்வன் வாசித்தார். கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:
மீரான் அலி,தி.மு.க.,: கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொறிநாய்கள் அதிகம் திரிகின்றன. அவற்றைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என்றார்.
பாதுஷா, சுயேச்சை: நகராட்சி அலுவலகம் முன்பு தினந்தோறும் சரக்கு வாகனத்தில் பொருட்கள் ஏற்றி இறக்கும் இடமாக மாறி வருகிறது. போக்குவரத்து நெருக்கடிக்கு வழிவகுக்கும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
ஜெயலட்சுமி,சுயேச்சை: இரண்டாவது வார்டான எனது வார்டு தொடர் புறக்கணிப்பில் உள்ளது. பலமுறை கவுன்சிலருக்கே தெரியாமல் பணிகளை செய்கின்றனர். இதில் பெரும்பாலான பணிகள் பொதுமக்களுக்கு பலனின்றி பாதியில் நிற்கிறது. எனவே எனது அதிருப்தியை வெளிப்படுத்தி வெளி நடப்பு செய்கிறேன் என கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியே சென்றார்.
தலைவர்: உங்களுடைய பிரச்சனைகள் என்னவென்று விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கவுன்சிலர்கள் ஷேக் உசேன் மற்றும் சப்ரஸ் நவாஸ் ஆகியோர் பேசுகையில், நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் எவை என்பது குறித்து வெளிப்படை தன்மையாக அறிவிக்க வேண்டும். இதனால் ஆக்கிரமிப்புகள் பற்றி விவரங்கள் வெளியே தெரியும் என்றனர்.

