/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதுமை உலகம் படைக்க புத்தகம் படிப்போம்
/
புதுமை உலகம் படைக்க புத்தகம் படிப்போம்
ADDED : பிப் 11, 2024 12:14 AM

ராமநாதபுரம்: புத்தகங்கள் இருந்தால் போதும் சிறைக்கம்பிகளும், கொட்டடிகளும் ஒருவரை அடைத்து வைக்க முடியாது, என்றார் மாவீரன் பகத்சிங். அக்கறை உடைய பெற்றோரும், அலமாரி நிறைய புத்தகங்களும் வாய்க்கப்பெறும் குழந்தையே அதிர்ஷ்டசாலி என்கிறார் ஜான் மெக்காலே.
ராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் நாளை(பிப்.12) வரை புத்தகத் திருவிழா காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.
புத்தகத்திருவிழா அரங்கில் பல்வேறு பதிப்பகங்கள் கடைகளை அமைத்துள்ளனர். இங்கு நுால்கள் மட்டுமல்லாமல் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள், சிப்பியில் இருந்து பொருட்கள் தயாரிக்கும் அரங்குகள், அறிவியல் இயக்க கண்காட்சி, கோளரங்கம் இடம்பெற்றுள்ளது.

