/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மினிபாராக முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் குடித்துவிட்டு கொட்டமடிக்கும் அவலம் பொதுமக்கள் முகம் சுளிப்பு
/
மினிபாராக முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் குடித்துவிட்டு கொட்டமடிக்கும் அவலம் பொதுமக்கள் முகம் சுளிப்பு
மினிபாராக முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் குடித்துவிட்டு கொட்டமடிக்கும் அவலம் பொதுமக்கள் முகம் சுளிப்பு
மினிபாராக முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் குடித்துவிட்டு கொட்டமடிக்கும் அவலம் பொதுமக்கள் முகம் சுளிப்பு
ADDED : ஜன 21, 2024 03:26 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் மதுப்பிரியர்கள் குடித்து விட்டு மது பாட்டில்கள், வாட்டர் கேன் உள்ளிட்டவற்றை ஆங்காங்கே வீசியுள்ளதால் பஸ்சிற்காக காத்திருக்கும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.
முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, ராமேஸ்வரம், அருப்புக்கோட்டை, கும்பகோணம், தஞ்சாவூர், விருதுநகர், திருச்செந்துார், திருநெல்வேலி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் 5000 பேருக்கும் அதிகமானோர் இங்கிருந்து பஸ்சில் பயணம் செய்கின்றனர்.
தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் காத்திருந்து செல்கின்றனர்.
போதுமான இடவசதி இல்லாததால் காத்திருக்கும் மக்கள் மழை, வெயில் காலத்தில் சிரமப்படுகின்றனர். கடைகள் முன்பு காத்திருக்கும் போது சில நேரங்களில் வாக்குவாதம் ஏற்படுகிறது. தாய்மார்கள் பாலுாட்டும் அறையில் பொதுமக்கள் காத்திருப்பதால் தாய்மார்கள் சிரமப்படுகின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை கட்டடம் அருகே மதுபான பிரியர்கள் தினந்தோறும் குடித்து விட்டு பாட்டில்கள் மற்றும் கேன் உள்ளிட்ட பொருட்களை அங்கே வீசிச் செல்கின்றனர்.
இதனால் துர்நாற்றம் வீசுவதால் அருகில் உள்ள கடைக்காரர்கள் சிரமப்படுகின்றனர். பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளும் முகம் சுளிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஏராளமான கடைகளில் ஒதுக்குப்புறங்களில் மதுபானப் பிரியர்கள் அமர்ந்து குடித்துவிட்டு பாட்டில்களை அங்கே விட்டு செல்கின்றனர். இது போல் தினந்தோறும் செய்வதால் ஏராளமான பாட்டில்கள் குவிந்துள்ளது.
போதுமான இட வசதி இல்லாததால் மக்கள் கடைகளின் முன்பு வெயில், மழைக்காலங்களில் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

