/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொட்டல்பச்சேரியில் 20 ஆண்டாக சாலை வசதி செய்து தரவில்லை உண்ணாவிரதம் அறிவிப்பு

ADDED : ஜன 23, 2024 04:20 AM
சிக்கல்: சிக்கல் ஊராட்சி பொட்டல்பச்சேரியில் 20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துார், சிக்கல் செல்லும் சாலையில் இருந்து இணைப்பு சாலையாக 3 கி.மீ.ல் பொட்டல்பச்சேரி கிராமம் அமைந்துள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பா.ஜ., கடலாடி கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்டாலின் கூறியதாவது:
சிக்கல் ஊராட்சி பொட்டல்பச்சேரியில் அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆர்.ஓ., பிளான்ட் பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படும் சேதமடைந்த சாலையின் வழியாக பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
எங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் விரைவில் பா.ஜ., சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.