/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்
/
அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்
அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்
அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்
ADDED : ஜன 10, 2024 12:14 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் வட்டாரத்தில் தொடர்ந்து பெய்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 90 சதவீதம் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவரிப்பயிராக நெல் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர்.
நடப்பாண்டில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக நெல் விவசாயம் செய்திருந்தனர். முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவ்வப்போது பெய்த மழையால் நெற்பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
ஒரு சில கிராமங்களில் முன்னதாக விதைக்கப்பட்ட இடங்களில் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சேதமடைந்து வீணாகிய நெற்பயிரை அறுவடை செய்து வந்தனர். நேற்று முதுகுளத்துார் வட்டாரத்தில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட ஏராளமான கிராமங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 90 சதவீதம் நெற்பயிர்கள் தற்போது தண்ணீரில் மூழ்கி வீணாகி உள்ளது.
இந்தாண்டு நன்கு விளைச்சல் அடைந்தும் பருவ மழையால் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி வீணாகியுள்ளதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பருவமழையில் பாதிக்கும் மேல் விவசாயம் அழிந்தது. தற்போது பெய்த மழைக்கு கிராமங்களில் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

