ADDED : செப் 15, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் :  ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம்,  இருதயபுரம் மற்றும் பெரியார் நகர், பொட்டக்கோட்டை, புலி வீரதேவன்கோட்டை, பொன்னால கோட்டை, நெடும்புலிக் கோட்டை, பொன்மாரி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் நெல் விதைப்பு பணியை துவங்கியுள்ளனர்.
விளை நிலங்களை உழவு செய்து தயார் நிலையில் வைத்திருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு பெய்த சாரல் மழையை பயன்படுத்தி, தற்போது விவசாயிகள் நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

