/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணியில் ஊராட்சி செயலர்கள் சங்க கூட்டம்
/
திருப்புல்லாணியில் ஊராட்சி செயலர்கள் சங்க கூட்டம்
ADDED : ஜன 23, 2024 04:11 AM
திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி செயலர்கள் சங்க கூட்டம் நடந்தது.
பிப்.2ல் தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நடக்கும் 18 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய பெருந்திரள் முறையீட்டு இயக்க ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து பணியாளர்களையும் அழைத்து செல்வது என முடிவெடுக்கப்பட்டது.
திருப்புல்லாணி ஊராட்சி செயலர்கள் சங்க ஒன்றிய தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பழனி முருகன் முன்னிலை வகித்தார்.
ஒன்றிய பொருளாளர் மங்களசாமி, ஒன்றிய மகளிர் அணி வாணிஸ்ரீ, உத்தரகோசமங்கை கல்யாண சுந்தரம், மாவட்ட துணை தலைவர் சேகு ஜலாலுதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நீண்ட கால கோரிக்கையான மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.

