/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடி கடற்கரையில் ஜன.21ல் பிரதமர் மோடி யாகத்தில் பங்கேற்பு நாளை ராமேஸ்வரம் கோயிலில் பூஜை
/
தனுஷ்கோடி கடற்கரையில் ஜன.21ல் பிரதமர் மோடி யாகத்தில் பங்கேற்பு நாளை ராமேஸ்வரம் கோயிலில் பூஜை
தனுஷ்கோடி கடற்கரையில் ஜன.21ல் பிரதமர் மோடி யாகத்தில் பங்கேற்பு நாளை ராமேஸ்வரம் கோயிலில் பூஜை
தனுஷ்கோடி கடற்கரையில் ஜன.21ல் பிரதமர் மோடி யாகத்தில் பங்கேற்பு நாளை ராமேஸ்வரம் கோயிலில் பூஜை
ADDED : ஜன 19, 2024 02:23 AM

ராமேஸ்வரம்,:அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிேஷகத்திற்காக விரதம் இருந்து வரும் பிரதமர் மோடி ஜன.,21ல் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்ய உள்ளார்.
முன்னதாக நாளை ராமேஸ்வரம் கோயிலில் பூஜை செய்து தீர்த்தங்களை சேகரிக்கிறார்.
நாளை(ஜன.,20) மதியம் 2:00 மணிக்கு பிரதமர் மோடி ராமேஸ்வரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கி காரில் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்கிறார். மதியம் 2:10 முதல் 2:45 வரை நடக்கும் ராமரின் கீர்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மதியம் 2:45 முதல் 3:30 மணி வரை கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் பிரதமர் மோடி புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். மதியம் 3:35 முதல் இரவு 7:15 மணி வரை நடக்கும் ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இரவு 7:25 மணிக்கு ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று ஓய்வெடுக்கிறார்.
உபவாசம்
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி 11 நாட்கள் உபவாசம் (விரதம் ) இருக்கும் பிரதமர் மோடி தினமும் ஒரு வேளை மட்டும் சாப்பிடுகிறார். அதனால் ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தில் சிறப்பு பூஜை செய்து கட்டில் மெத்தை இன்றி தரையில் எளிமையான படுக்கை விரித்து ஓய்வெடுக்க உள்ளார்.
தனுஷ்கோடியில் பூஜை
ஜன.,21 காலை 9:00 மணிக்கு மடத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஸ்ரீ ராமர் இலங்கைக்கு பாலம் அமைத்த தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு செல்கிறார். அங்கு காலை 9:30 முதல் 10:00 மணி வரை ஸ்ரீ ராமரை வேண்டி யாகம் வளர்த்து பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்கிறார்.
பின் தனுஷ்கோடி அருகே உள்ள விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டிய இடத்தில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயிலில் காலை 10:30 முதல் 11:00 மணி வரை சுவாமி தரிசனம் செய்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11:30 மணிக்கு ஹெலிகாப்டரில் மதுரை புறப்படுகிறார். அங்கிருந்து விமானத்தில் டில்லி செல்கிறார்.

