/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தேங்கிய மழைநீரால் நோயாளிகள் அவதி

ADDED : ஜன 10, 2024 12:11 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீரால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
ராமநாதபுரத்தில் நேற்று காலை முதல் கனமழை பெய்ததால் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம், பிரசவ வார்டு, மன நலப்பிரிவு, சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், யோகா பிரிவு, நிர்சிங் கல்லுாரி மாணவிகள் விடுதி ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
வளாகத்தில் தேங்கிய நீரால் எந்த இடத்தில் பள்ளம் உள்ளது என்பது தெரியாமல் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
பிரசவ வார்டில் குழந்தைகளை துாக்கிக் கொண்டு மழை நீரில் செல்லும் நிலை ஏற்பட்டது.
நோயாளிகளை பார்க்க வந்தவர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வந்த டாக்டர்கள், நர்ஸ்கள் என அனைவரும் தேங்கிய நீரால் அவதிப்பட்டனர்.
ராமநாதபுரத்தில் மழை பெய்தாலே அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தண்ணீர் மிதக்கிறது.
இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த அரசு மருத்துவமனை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதற்கு அச்சப்படும் நிலை உள்ளது.-----