/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை அருகே சாலையோரம் குப்பை எரிப்பதால் காற்று மாசு கண்டுகொள்ளாத மாசு கட்டுப்பாட்டு வாரியம்

ADDED : ஜூன் 25, 2025 08:41 AM
கீழக்கரை : கீழக்கரை அருகே நகராட்சிக்கு சொந்தமான மோர்க்குளம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் மையம் அமைந்துள்ளது. பல லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இக்குப்பை கிடங்கிற்கு கீழக்கரை நகர் பகுதியில் இருந்து டன் கணக்கில் குப்பை சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உரக்கிடங்கிற்கு அருகே தினந்தோறும் குப்பை தீ வைத்து எரிக்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலை அருகே நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு செல்லும் வழியில் ரோட்டோரங்களில் குப்பையை மொத்தமாக குவித்து வைத்து எரிக்கும் போக்கு தொடர்கிறது.
இதனால் அப்பகுதியில் கரும்புகை எழுகிறது. காற்று மாசு ஏற்படுகிறது. எனவே சாலையோரங்களில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் தீ வைத்து எரிக்கும் போக்கு முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.
கரும்புகை ரோட்டில் பரவுவதால் டூவீலர் மற்றும் வாகன ஓட்டிகள் அதனை சுவாசிக்கும் போது கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சிரமத்திற்குள்ளாகின்றனர்.
எனவே சாலை ஓரங்களில் குப்பையை எரிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருவாரியான ஊராட்சிகள் மற்றும் நகர் பகுதிகளில் குப்பையை தீ மூட்டி எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.
இது குறித்த உரிய விழிப்புணர்வை மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் என்றனர்.