/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொங்கல் விழா
/
பரமக்குடி நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொங்கல் விழா
பரமக்குடி நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொங்கல் விழா
பரமக்குடி நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொங்கல் விழா
ADDED : ஜன 14, 2024 04:06 AM

பரமக்குடி : பரமக்குடியில் உள்ள அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
பரமக்குடி நகராட்சியில் தலைவர் சேது கருணாநிதி தலைமை வகித்தார். துணை தலைவர் குணா முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் ஜெயராமன் வரவேற்றார்.
நகராட்சி அலுவலக வளாகத்தில் அனைத்து அலுவலர்களும் இணைந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.
*பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் சிந்தாமணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து அனைத்து அலுவலர்களும் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர். ஆணையாளர் கருப்பையா, துணை ஆணையர் தேவபிரிய தர்ஷினி உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
*போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் சத்யா தலைமையில் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடினர். ஆணையாளர் பாலசுப்பிரமணியம், துணை ஆணையர் சிவசாமி கலந்து கொண்டனர்.
*நயினார்கோவில் ஒன்றியத்தில் தலைவர் வினிதா தலைமையில் துணைத் தலைவர் ஜெயபாலன் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., முரளி, துணை பி.டி.ஓ., திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர்.
*பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கல்விக் குழு தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் தினகரன் முன்னிலை வகித்தனர்.m முதல்வர் சோபனா தேவி வரவேற்றார்.
கோல போட்டிகள், கோலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி மழலையர்கள் மாட்டு வண்டிகளில் அழைத்து வரப்பட்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சுவாமிநாதன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. செங்குடி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் ஜான் தலைமையிலும், வரவணி ஊராட்சியில் தலைவர் கண்ணன், பிச்சங்குறிச்சி ஊராட்சியில் தலைவர் நாகமுத்து, சேத்திடல் ஊராட்சியில் தலைவர் ராமநாதன் தலைமையிலும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. கள்ளிக்குடி ஊராட்சியில் தலைவர் புஷ்பம், கடலுார் ஊராட்சியில் தலைவர் முருகவள்ளி, ஆயங்குடி ஊராட்சியில் தலைவர் காளியம்மாள், மேல்பனையூர் ஊராட்சியில் தலைவர் கோபிநாத், கூடலூர் ஊராட்சியில் தலைவர் கவிதா, பாரனுார் ஊராட்சியில் தலைவர் மணிமேகலை, சோழந்துாரில் ஊராட்சி தலைவர் சாத்தையா, சித்துார்வார்டியில் தலைவர் ராணி தலைமையிலும் பொங்கல் விழா நடந்தது.
---

