நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டியில் 500 ஆண்டுகள் பழமையான சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோயில் உள்ளது.
ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயில் கும்பாபிேஷகம் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
தற்போது தொண்டியை சேர்ந்த பக்தர்கள் சார்பில் கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து கோயிலை சீரமைப்பதற்கான பாலாலய பூஜை சிவாச்சாரியார் சந்திரசேகர் தலைமையில் கணபதி ஹோம பூஜையுடன் விமான பாலாலய பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

