/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்
/
ராமேஸ்வரத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்
ADDED : செப் 18, 2025 04:47 AM

ராமேஸ்வரம் : -ராமேஸ்வரத்தில் பெய்த திடீர் மழையால் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
நேற்று ராமேஸ்வரத்தில் திடீரென கோடை மழை பெய்தது. இதனால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 100 மீ.,க்கு மழை நீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்தபடி சென்றன. மேலும் நகராட்சி அலுவலகம் முன்பு 2 அடி உயரத்திற்கு மழை நீர் குளம் போல் தேங்கியது. பின் மழை நின்றதும் தேங்கிய தண்ணீர் ஒரு மணி நேரத்தில் கடலில் கலந்தது.
மேலும் என்.எஸ்.கே.வீதியில் உள்ள முனியசாமி கோயில் திடலில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்தது.
இதனால் முதியவர்கள், குழந்தைகள் வெளியேற முடியாமல் வீடுகளில் முடங்கினர்.
நகராட்சி நிர்வாகம் வாறுகாலை சுத்தம் செய்யாததால் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் செல்ல முடியாமல் தண்ணீர் தேங்கியுள்ளதால் இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

