/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்ட அளவில் துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டி
/
ராமநாதபுரம் மாவட்ட அளவில் துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டி
ராமநாதபுரம் மாவட்ட அளவில் துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டி
ராமநாதபுரம் மாவட்ட அளவில் துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டி
ADDED : செப் 05, 2025 11:16 PM

ராமநாதபுரம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பில் மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் வினாடி- வினா போட்டி சிஎஸ்ஐ கல்வியியல் கல்லுாரியில் நடந்தது.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரி சளிப்பு நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது. அறிவியல் இயக்கம் மாவட்ட தலைவர் லியோன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காந்தி வரவேற்றார். கல்லுாரி தாளாளர் மார்டின் மனோகரன், முதல்வர் ஆனந்த், ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி ராமநாதபுரம் துணை கவர்னர் சோமசுந்தரம் ஆகியோர்  கேடயம், சான்றிதழ், புத்தகம்  வழங்கினர். ஐந்தர்மந்தர் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வினாடி-வினாவை ஒருங்கிணைத்தார்.  துளிர் வினாடி வினா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் நன்றி கூறினார்.
மாவட்ட அளவிலான அறிவியல் வினாடி-வினா போட்டியில் தமிழ் வழியில் 6,7,8 வகுப்பு பிரிவில் சாயல்குடி கே.எஸ்.எஸ்.என். நடுநிலைப்பள்ளி முதலிடம்,   முத்துவயல் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி 2ம் இடம்,  தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி  3ம் இடம் பெற்றனர்.  9,10ம் வகுப்பு பிரிவில் சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  முதலிடம்,  முதுப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 2ம் இடம்,  பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி 3ம் இடம் பெற்றனர். பிளஸ் 1  பிளஸ் 2 பிரிவில்   தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம்,  கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி   2ம் இடம்,  தேரிருவேலி ராவுத்தர் சாகிப் மேல்நிலைப்பள்ளி 3ம் இடம் பெற்றனர்.
ஜந்தர் மந்தர் ஆங்கிலப் பிரிவில் 6,7,8 வகுப்பு பிரிவில் தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர் நேஷனல் பள்ளி முதலிடம், ராமநாதபுரம்  வேலு மாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2ம் இடம், ராமநாதபுரம்  நேஷனல் அகாடமி மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3ம் இடம் பெற்றனர்.
மேலும் 9,10ம் வகுப்பு பிரிவில்  தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர் நேஷனல் பள்ளி முதலிடம், ராமநாதபுரம் வேலு மாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2ம் இடம்.  பரமக்குடி டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3ம் இடம் பெற்றனர்.
பிளஸ்1, பிளஸ் 2  வகுப்பு பிரிவில்  ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம்,  ராமநாதபுரம் லுாயிஸ் லெவல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2ம் இடம்,  பரமக்குடி டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3ம் இடம் பெற்று  பரிசுகளை பெற்றனர்.
முதல், இரண்டாமிடம் பெற்றவர்கள் கன்னியா குமரியில் நடைபெறும் மண்டல அளவிலான துளிர் வினாடி-வினா போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

