/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் கொட்டித்தீர்த்த மழை 8 மணி நேரத்தில் 385.90 மி.மீ., பதிவு இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ADDED : ஜன 10, 2024 01:02 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்த நிலையில் 6:00 முதல் மதியம் 2:00 மணி வரை 385.90 மி.மீ., பதிவானது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மழையில் நனைந்து சிரமப்பட்டனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியிலும், இந்தியப்பெருங்கடலின் கிழக்கில் இலங்கைக்கு தெற்கு பகுதியிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நேற்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்தது.
இதன் தொடர்சியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. காலை 6:00 முதல் மதியம் 2:00மணி வரை அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் மட்டும் 88 மி.மீ., மண்டபம் 42.40 மி.மீ.,ராமேஸ்வரம் 34.90 மி.மீ., என மாவட்டம் முழுவதும் 385.90 மி.மீ., மழை பதிவானது.
பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் மழையில் நனைந்து சிரமப்பட்டனர். மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம்- துாத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலை, காவனுார், தொருவளூர், வயல்வெளிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
அறுவடைக்கு தயாராகி வரும் நெற்பயிர்கள் தொடர்மழையால் அழுகிவிடும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.