/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திறப்பு விழா காணாத ரேஷன் கடை கட்டடம்; எப்போ தான் திறப்பீங்க
/
திறப்பு விழா காணாத ரேஷன் கடை கட்டடம்; எப்போ தான் திறப்பீங்க
திறப்பு விழா காணாத ரேஷன் கடை கட்டடம்; எப்போ தான் திறப்பீங்க
திறப்பு விழா காணாத ரேஷன் கடை கட்டடம்; எப்போ தான் திறப்பீங்க
ADDED : மார் 26, 2025 04:03 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே அப்பனேந்தல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன்கடை கட்டடம் 6 மாதங்களாகியும் திறக்கப்படாததால் 7 கி.மீ., நடந்து சென்று பொருட்கள் வாங்கும் அவலநிலை தொடர்கிறது.
முதுகுளத்துார் அருகே அப்பனேந்தல், நாகனேந்தல், நெடுங்குளம் கிராமங்களில் 400க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் கடை வசதி இல்லாததால் 7 கி.மீ.,ல் உள்ள தட்டான்குடியிருப்பு கிராமத்திற்கு சென்று அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர். இலவச அரிசியை கூட செலவு செய்து வாங்கி வரும் அவலநிலை இருப்பதாக கடந்த சில மாதத்திற்கு முன்பு தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக ரூ.7.50 லட்சத்தில் அப்பனேந்தல் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டும் தற்போது வரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.
இப்பகுதியை சேர்ந்த முனியசாமி கூறியதாவது:
அப்பனேந்தல் கிராமத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு புதிய ரேஷன்கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் உள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும் புதிய ரேஷன் கடை கட்டடம் திறக்கப்படாததால் தற்போது வரை இலவச பொருட்களுக்கு பணம் செலவு செய்து வாங்கி வரும் அவலநிலை தொடர்கிறது. மழை,வெயில் காலங்களில் சிரமப்படுகின்றோம். ரேஷன்கடை பொருள் வாங்கும் நேரத்தில் அத்தியாவசிய வேலைக்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றோம்.
எனவே கட்டடத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.