/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழக மீனவர்கள் 40 பேர் விடுதலை; இலங்கை அரசு உத்தரவு 150 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தல்
/
தமிழக மீனவர்கள் 40 பேர் விடுதலை; இலங்கை அரசு உத்தரவு 150 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் 40 பேர் விடுதலை; இலங்கை அரசு உத்தரவு 150 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் 40 பேர் விடுதலை; இலங்கை அரசு உத்தரவு 150 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 21, 2024 07:19 AM
ராமநாதபுரம் : தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 40 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் , நேற்று முன்தினம் இரவு 40 பேரையும் விடுவித்து இலங்கை அரசு உத்தரவிட்டது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதால் மீனவர்களிடையே அதிருப்தி நிலவுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு இலங்கை அரசுக்கு இந்திய அரசு சார்பில் இப்பிரச்னையில் அழுத்தம் தரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த 18 மீனவர்கள், நாகபட்டினம், புதுக்கோட்டையை சேர்ந்த 22 மீனவர்கள் என 40 மீனவர்களையும் விடுவித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
சிறையில் உள்ள மீனவர்கள் நாளை அந்நாட்டு நீதிமன்றத்தில் அரசின் உத்தரவை ஏற்று விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மீனவர்களின் 12 நாட்டுப் படகுகள், 138 விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி உள்ளனர்.
தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பி கூறுகையில், இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 40 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இலங்கையில் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட 9 படகுகள் காத்திருப்பில் உள்ளன. மீனவர்களின் வாழ்வாதாரமான அங்குள்ள அனைத்து படகுகளை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.--------

