/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நெல் அறுவடை துவக்கம்
/
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நெல் அறுவடை துவக்கம்
ADDED : ஜன 23, 2024 04:21 AM

அறுவடை இயந்திர வாடகை உயர்வு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் அறுவடைப் பணிகள் துவங்கியுள்ள நிலையில் அறுவடை இயந்திரங்களின் வாடகை உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தின் நெற்களஞ்சியங்களான திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் சில பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஈரப்பதம் உள்ள அறுவடை வயல்களில் செயின் இயந்திரம் மூலமும், மற்ற வயல்களில் சாதாரண இயந்திரத்தில் அறுவடை நடக்கின்றன.
செயின் இயந்திரத்திற்கு மணிக்கு ரூ.3000, டயர் இயந்திரத்திற்கு ரூ.1700 வாடகை வசூலிக்கின்றனர். வெளி மாவட்ட இயந்திரங்கள் என்பதால் அந்த இயந்திரங்களை உள்ளூர் புரோக்கர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு விவசாயிகளிடம் கூடுதல் பணம் வசூல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.

