/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 19, 2024 04:44 AM

ராமநாதபுரம்; தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் ெஹல்மெட் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.
தமிழகத்தில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா ஜன. 15 முதல் பிப்.14 வரை கொண்டாடப்படுகிறது. சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை பொதுமக்களிடம் உணர்த்தும் வகையில் விபத்தில்லா சாலை பயணம் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் 'ெஹல்மெட்' அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி போலீசார் டூவீலரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். கலெக்டர் விஷ்ணுசந்திரன், எஸ்.பி., சந்தீஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். ராமேஸ்வரம் ரோடு, பாரதிநகர், டி-பிளாக் வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ேஷக் முகமது, போக்குவரத்து ஆய்வாளர்கள் செந்தில் குமார், பத்மபிரியா, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

