/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் அருகே ஆர்.எஸ்.எஸ்., விழா
/
ராமேஸ்வரம் அருகே ஆர்.எஸ்.எஸ்., விழா
ADDED : அக் 12, 2025 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் :  ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு விழா நடந்தது.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்(ஆர்.எஸ்.எஸ்.,) நுாற்றாண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் விழிப்புணர்வு ஊர்வலம், விழா நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நேற்று தங்கச்சிமடம் முருகன் கோயில் வளாகத்தில் நுாற்றாண்டு விழா நடந்தது.
ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் கோபால், முத்துக்குமார், ராமேஸ்வரம் வ.உ.சி., பேரவை தலைவர் வேடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடுகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ்., சேவைகள் குறித்து விளக்கி பேசினர்.

