ADDED : மார் 25, 2025 05:41 AM

பரமக்குடி: பரமக்குடி அருகே கலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மணல் சிற்பம் அமைத்து ஆசிரியர் சரவணன் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
கலையூர் அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர் சரவணன். இப்பள்ளியில் ஒவ்வொரு உலக அளவிலான தினம் மற்றும் பல்வேறு அதிசய, இயற்கை நிகழ்வுகளை மணல் வடிவில் சிற்பமாக வடித்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். இதற்காக பள்ளி வளாகத்தில் மணல் சிற்பங்களை வடிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
சர்வதேச காடுகள் தினம் மார்ச் 21 கொண்டாடப்பட்டதையடுத்து மாணவர்களுடன் இணைந்து சிற்பத்தை வடிவமைத்தார். இதைத் தொடர்ந்து இரண்டு கைகளால் பூமியுடன், மரங்கள் நிறைந்த வனங்களை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதனால் மாணவர்களுக்கு அன்றாட நிகழ்வுகள் நினைவுக்கு வரும் சூழலில், மணல் சிற்பக்கலையும் கற்றுக் கொடுக்கப்படுவதால் உற்சாகம் அடைவதாக ஆசிரியர் தெரிவித்தார். மேலும் அறிவியல், ஓவியம், சிற்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு உள்ளிட்டவை குறித்து மாணவர்கள் மத்தியில் ஊக்கப்படுத்தி வருகிறார்.