/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலம்
/
சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலம்
சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலம்
சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலம்
ADDED : ஜன 24, 2024 05:21 AM
ராமநாதபுரம், : சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புபேட்ஜ் அணிந்து ஊர்வலம் சென்றனர்.
வருவாய் கிராம உதவியாளர்களுக்கு ரூ.6750 ஓய்வூதியமாக வழங்க வேண்டும். அரசுத்துறை காலிப்பணியிடங்களில்அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களை நியமித்து கால முறை ஊதியம் வழங்க
வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம்
வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் முன்பு இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சகாய தமிழ்செல்வி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கணேசன்வரவேற்றார்.
கோரிக்கைகளை விளக்கி மாநில துணைத்தலைவர்தனலெட்சுமி, அங்கன்வாடி ஊழியர்கள் சங்க வைரப்பிரியா பேசினர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் சோமசுந்தர், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர்கணேசமூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சவுந்திரராஜன்,செயலாளர் வைரவன் முருகன்.
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தின் மாநிலஇணை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் அமைப்பு மாநில பொதுச்செயலாளர் மாயமலை ஆகியோர் பேசினர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அம்பிராஜ் நன்றி கூறினார்.

