/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பறவைகளை வேட்டையாடியவர்களை மடக்கிப்பிடித்த கமுதி விவசாயி ஓட்டல்களில் பறவைகள் விற்பனை
/
பறவைகளை வேட்டையாடியவர்களை மடக்கிப்பிடித்த கமுதி விவசாயி ஓட்டல்களில் பறவைகள் விற்பனை
பறவைகளை வேட்டையாடியவர்களை மடக்கிப்பிடித்த கமுதி விவசாயி ஓட்டல்களில் பறவைகள் விற்பனை
பறவைகளை வேட்டையாடியவர்களை மடக்கிப்பிடித்த கமுதி விவசாயி ஓட்டல்களில் பறவைகள் விற்பனை
ADDED : ஜன 24, 2024 05:14 AM

கமுதி, : -கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியில் விவசாய நிலங்களில் இரை தேடும் அரிய வகை பறவைகளை வேட்டையாடியவர்களை கண்ணார்பட்டி விவசாயி முருகேசன் மடக்கிப் பிடித்தார். அவர்கள் ஓட்டல்களில் அவற்றை விற்பது தெரிய வந்தது.
கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நெல், மிளகாய், பருத்தி, சிறுதானியங்கள் விவசாயம் செய்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் ஏராளமான விவசாயங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
ஏராளமான அரிய வகை பறவைகள் இரை தேடி வருகின்றன. இந்நிலையில் சில ஆசாமிகள் பறவைகளை வேட்டையாடி வருகின்றனர். கமுதி- அருப்புக்கோட்டை சாலை வழிவிட்ட அய்யனார் கோயில் அருகே உள்ள விவசாய நிலத்தில் சிலர் பிரத்தியேகமாக மூன்று சக்கர வாகனம் தயார் செய்து கண்ணி வலைகள் வைத்து பறவைகளை வேட்டையாடினர்.
அப்போது அவ்வழியே சென்ற கண்ணார்பட்டி விவசாயி முருகேசன், வழக்கறிஞர் கோட்டை சுந்தரமூர்த்தி நேரில் பார்த்து பறவைகளை வேட்டையாடியவர்களை மடக்கிப்பிடித்தனர். அவர்கள் வேட்டையாடப்படும் பறவைகளை ஓட்டலுக்கு விற்பனை செய்வதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து வேட்டையாடியவர்களை வனத்துறையினரிடம் ஒப்படைக்க முற்பட்டபோது வேட்டையாடிய பறவைகளை பறக்கவிட்டு தப்பிச் சென்றனர். விவசாயி முருகேசன் கூறியதாவது:
கமுதி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சில மர்ம நபர்கள் பிரத்தியேகமாக மூன்று சக்கர வாகனம் தயார் செய்து விவசாய நிலங்களில் இரை தேடும் பறவைகளை வேட்டையாடி ஓட்டலில் விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர்.
வழிவிட்ட அய்யனார் கோயில் அருகே பிடிபட்ட சிலர் பறவைகளை ஓட்டலில் விற்பனை செய்வதற்காக பிடித்ததாகவும் கூறியுள்ளனர். எனவே பறவைகளை வேட்டையாடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், ஓட்டல்களில் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

