/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
/
கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
ADDED : ஜன 23, 2024 04:25 AM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி உள்ளாட்சிதுறை ஊழியர்கள் சார்பில் கோரிக்கைளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் அய்யாத்துரை தலைமை வகித்தார். தலைவர் சந்தானம் முன்னிலை வகித்தனர். ஊராட்சிகளில் பணிபுரியும் பம்ப் மோட்டார் ஆப்பரேட்டர்களுக்கு வேலைக்குரிய ஊதியம் வழங்கி பணிநிரந்தரம் செய்ய வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு ஆண்டு தோறும் ஊதிய உயர்வு, சம்பளத்தை 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு கருணைத்தொகை, ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை போராட்டம் செய்தனர். அதன் பிறகு நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அப்போது அரசிடம் தெரிவித்து கோரிக்கைளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

