/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் ஒருவர் கைது
/
3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் ஒருவர் கைது
3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் ஒருவர் கைது
3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் ஒருவர் கைது
ADDED : பிப் 05, 2024 11:02 PM

கடலாடி : கடலாடியில் 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நேற்று இங்குள்ள அங்கன்வாடிக்கு பார்வை குறைபாடுள்ள தந்தையுடன் 3 வயது பெண் குழந்தை வந்துள்ளார். அப்போது கடலாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி குமரன் என்ற உத்தமநாதன் 40, தான் கொண்டு விடுவதாக கூறி குழந்தையை துாக்கி கொண்டு சென்றுள்ளார்.
குழந்தை அங்கன்வாடிக்கு செல்லவில்லை என்பது பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து குழந்தையை தேடிய போது அங்கன்வாடி அருகே ஊருணிக்கரையில் புதர் பகுதியில் அழுது கொண்டிருந்தது.
குழந்தையை மீட்டு சாயல்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். கடலாடி போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து உத்தமநாதனை கைது செய்தனர்.