/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடு ரோட்டில் தெருநாய்கள் உலா விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்
/
நடு ரோட்டில் தெருநாய்கள் உலா விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்
நடு ரோட்டில் தெருநாய்கள் உலா விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்
நடு ரோட்டில் தெருநாய்கள் உலா விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 19, 2024 04:33 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடுரோட்டில் உலா வரும் தெருநாய்கள், கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. சில இடங்களில் விபத்துக்களும் நடக்கிறது.
ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகளுக்கு முறையான கருத்தடை ஆப்பரேஷன், தடுப்பூசி போடப்படாததால் நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
போக்குவரத்து மிகுந்த ராமநாதபுரம்- ராமேஸ்வரம் ரோடு, மதுரை ரோடு மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன.
இவை வாகனங்களின் குறுக்கே திடீரென ஓடுவதால் சிறிய அளவில் விபத்துக்களும் நடக்கிறது. இதில் வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். நாய்கள் பரிதாபமாக பலியாகின்றன. இதே போல கால்நடைகளும் கண்டபடி ரோட்டில் திரிவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், நோய்பட்டுள்ள நாய்களை பிடிக்க வேண்டும். கால்நடைகளை ரோட்டில் மேய விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் முன்வர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

