ADDED : மார் 25, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் பகுதியில் செயல்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவஸ்ய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் ஆய்வு நடந்தது.
பள்ளி மாணவர்களின் பராமரிப்பு, காலை வழிபாடு, உணவு பொருட்கள், தங்கும் வசதிகளை பார்வையிட்டனர். ஆசிரியர்களின் வருகை பதிவேடு, சமையல் பணியாளர்கள் அட்டவணைப்படி சமைத்து உள்ளார்களா என்பது குறித்து ஆய்வு செய்தனர். மாநிலத் திட்ட இணை இயக்குனர் குமார், மாவட்ட உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளி நிர்வாகி மாடசாமி இருந்தார்.