/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் தரமற்ற வாறுகால் மூடிகள் பொதுமக்கள் அவதி
/
கீழக்கரையில் தரமற்ற வாறுகால் மூடிகள் பொதுமக்கள் அவதி
கீழக்கரையில் தரமற்ற வாறுகால் மூடிகள் பொதுமக்கள் அவதி
கீழக்கரையில் தரமற்ற வாறுகால் மூடிகள் பொதுமக்கள் அவதி
ADDED : ஜன 23, 2024 04:27 AM
கீழக்கரை: கீழக்கரை நகராட்சி சாலைகளில் கழிவுநீர் வாறுகால் இணைப்பு கொடுக்கப்பட்டு அதன் வழியாக கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் கழிவுநீர் வாறுகால் இணைப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் மீது சிமென்ட் மூடி போடப்பட்டுள்ளது. மூடியின் தரம் மிக மோசமாக இருப்பதால் டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் போது மூடி உடைந்து சேதமடைகிறது. கீழக்கரையை சேர்ந்த ஜஹாங்கீர் அரூசி கூறியதாவது:
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் தரமற்ற மூடிகளை அகற்றிவிட்டு தரமான மூடிகளை அமைக்க வேண்டும். இதன் வழியாக பள்ளி வேன், டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி தடுமாறுகின்றன.
எனவே குறைகளை நிவர்த்தி செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்றார்.