/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துார் பகுதியில் மழை நீரில் நெற்பயிர் அழுகியதால் வேதனை
/
முதுகுளத்துார் பகுதியில் மழை நீரில் நெற்பயிர் அழுகியதால் வேதனை
முதுகுளத்துார் பகுதியில் மழை நீரில் நெற்பயிர் அழுகியதால் வேதனை
முதுகுளத்துார் பகுதியில் மழை நீரில் நெற்பயிர் அழுகியதால் வேதனை
ADDED : ஜன 19, 2024 04:41 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பழங்குளம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தேங்கிய மழைநீரால் அழுகியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
முதுகுளத்துார் தாலுகாவில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக நெல் விவசாயம் செய்திருந்தனர். போதுமான மழை பெய்த போது நெற்பயிர்கள் நன்கு வளர்ந்தது. கடந்த மாதம் பெய்த மழையால் ஏராளமான கிராமங்களில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகியது.
முதுகுளத்துார் அருகே பழங்குளம் கிராமத்தில் 800 ஏக்கருக்கும் மேல் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.
மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகியது. தற்போது வரை அறுவடை செய்ய முடியாமல் உள்ளனர். தேங்கிய மழை நீரால் நெற்பயிர்கள் அழுகியது.
இதனால் இந்த ஆண்டு விவசாயத்தில் செலவு செய்த பணம் முழுவதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே போல் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

