/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டி.பிளாக் கருவாட்டு சந்தையை மீன் சந்தைக்கு மாற்ற வேண்டும்
/
டி.பிளாக் கருவாட்டு சந்தையை மீன் சந்தைக்கு மாற்ற வேண்டும்
டி.பிளாக் கருவாட்டு சந்தையை மீன் சந்தைக்கு மாற்ற வேண்டும்
டி.பிளாக் கருவாட்டு சந்தையை மீன் சந்தைக்கு மாற்ற வேண்டும்
ADDED : மார் 28, 2025 05:37 AM
ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வந்த கருவாட்டு சந்தை புதிய பஸ்ஸ்டாண்ட் புனரமைப்பு பணிகளால் டி.பிளாக் பகுதிக்கு மாற்றப்பட்டது. கருவாட்டு விற்பனையாளர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர்.
நகருக்கு வெளியே அமைந்திருப்பதால் போதுமான வியாபாரம் இல்லாமல் தவிக்கின்றனர். டி.பிளாக் பகுதியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. இயற்கை உபாதை கழிப்பதற்கு கூட வழியில்லாததால் கருவாடு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். டி.பிளாக் பகுதியில் இயங்கி வரும் கருவாட்டு சந்தையை ராமநாதபுரம் மீன் சந்தைக்கு மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம், ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என கருவாட்டு வியாபாரிகள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.