/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் புளி விளைச்சல் அதிகரிப்பு
/
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் புளி விளைச்சல் அதிகரிப்பு
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் புளி விளைச்சல் அதிகரிப்பு
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் புளி விளைச்சல் அதிகரிப்பு
ADDED : மார் 26, 2025 05:12 AM
தேவிபட்டினம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான பாரனுார், ஆவரேந்தல், புல்லமடை, இருதயபுரம், சோழந்துார், செங்குடி, சீனாங்குடி, சனவேலி உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோரங்களிலும் பட்டா நிலங்களிலும் விவசாயிகள் வளர்ச்சி அடைந்த புளிய மரங்களை பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடப்பு ஆண்டில் பருவமழை கை கொடுத்ததால் கண்மாய், குளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் புளிய மரங்களில் புளி விளைச்சல் அதிகரித்துள்ளது. சில புளிய மரங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காய்கள் காய்த்து மகசூல் கொடுக்கும்.
இந்த வகை மரங்களிலும் நடப்பு ஆண்டில் பெய்த மழையால் தற்போது அதிகளவில் புளி விளைச்சல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் பல்வேறு பகுதிகளிலும் புளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.