/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தெலுங்கானா கஞ்சா கடத்தல் மன்னன் கைது
/
தெலுங்கானா கஞ்சா கடத்தல் மன்னன் கைது
ADDED : ஜன 14, 2024 12:34 AM

ராமேஸ்வரம்:-தெலுங்கானா கஞ்சா கடத்தல் மன்னன் சாகம் மல்லா ரெட்டி 28, ராமேஸ்வரம் போலீசாரால் 11 மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ராமேஸ்வரம் கோயில் கார் பார்க்கிங் பகுதியில் 2023 பிப்.5ல் நிறுத்தப்பட்டிருந்த காரில் 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதில் தொடர்புடையவர்களை தேடினர்.
இது தொடர்பாக ராமேஸ்வரம் கோயில் ஊழியர் தனசேகரன், புதுரோடு முத்துக்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஜார்க்கண்ட் மாநில பதிவெண் கொண்ட கடத்தலுக்கு பயன்படுத்திய காரின் உரிமையாளர் சாகம் மல்லாரெட்டி 28, எனவும், இவர் தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டையை சேர்ந்தவர் எனத்தெரிந்தது.
இவர் தெலுங்கானாவில் கஞ்சா கடத்தல் மன்னனாக செயல்பட்டுள்ளார். ராமேஸ்வரம் எஸ்.ஐ., கோட்டைச்சாமி தலைமையில் போலீசார் அங்கு சென்று சாகம் மல்லாரெட்டியை கைது செய்தனர். சூர்யாபேட்டை நீதிமன்றம் அனுமதியுடன் அழைத்துவந்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

