/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெட்டி அழிக்கப்படும் பனை மரங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தாத நிலை
/
வெட்டி அழிக்கப்படும் பனை மரங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தாத நிலை
வெட்டி அழிக்கப்படும் பனை மரங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தாத நிலை
வெட்டி அழிக்கப்படும் பனை மரங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தாத நிலை
ADDED : மார் 26, 2025 05:34 AM
கீழக்கரை : கீழக்கரை தாலுகா தில்லையேந்தல், மாயாகுளம், காஞ்சிரங்குடி, சேதுக்கரை, ரெகுநாதபுரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தாத நிலையில் அதிகளவில் பனை மரங்களை வெட்டி அழிக்கும் போக்கு தொடர்கிறது.
ரியல் எஸ்டேட் தொழிலுக்காக விளைநிலங்களில் வளர்ந்திருக்கும் பனை மரங்கள் மிகுதியாக வெட்டி அழிக்கப்படுகிறது. இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
பனை மரத்தை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைகின்றனர்.
இந்நிலையில் பனை மரக்காடுகளை செங்கல் சூளைகளின் எரி பொருள்களுக்காக வெட்டி அழிக்கும் செயல் பல இடங்களில் சத்தம் இல்லாமல் அரங்கேறி வருகிறது.
பொதுவாக பனை மரங்களை வெட்டி அழிப்பதற்கு முன்பாக வருவாய்த் துறையின் அனுமதி பெற்று வெட்ட வேண்டும். ஆனால் இது போன்ற விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் பனை மரங்களை அழிவிலிருந்து காப்பாற்ற உரிய முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.