/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் மீனவர்களை விடுவிக்க பிரதமர் வலியுறுத்த வேண்டும் மீனவர்கள் தீர்மானம்

ADDED : ஜன 19, 2024 04:45 AM
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் வாடும் பாம்பன் மீனவர்கள் 18 பேரை விடுவிக்க பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
நேற்று ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், மன்னார் வளைகுடா ஆழ்கடலில் இந்திய- இலங்கை மீனவர்கள் பரஸ்பரம் மீன்பிடித்து வந்த நிலையில் ஜன.16ல் மீன்பிடிக்க பாம்பன் மீனவர்கள் 18 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது வேதனை அளிக்கிறது.
மீனவர்களையும், படகையும் விடுவிக்க பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் இலங்கையை வலியுறுத்த முதல்வர் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். எதிர் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இலங்கையுடன் சுமூக தீர்வு காண வேண்டும் என தீர்மானத்தில் தெரிவித்தனர்.
நேற்று ராமேஸ்வரத்தில் மீனவர் சங்க தலைவர் சேசுராஜா தலைமையில் நடந்த கூட்டத்தில், ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடியை வரவேற்கிறோம். 2018 முதல் 2024 வரை இலங்கை வசமுள்ள 150 விசைப்படகுகளை விடுவிக்காமல் உள்ளதால், படகு உரிமையாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
எனவே படகுகளையும், சிறையில் வாடும் ராமேஸ்வரம் மீனவர்களை மீட்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.