ADDED : ஜன 10, 2024 12:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்கு ஏற்றதாக தேசிய நெடுஞ்சாலை பகுதியிலுள்ள குடிநீர் தொட்டி பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அமைக்கப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மரை திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் நேற்று துவக்கி வைத்தார்.
வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், தி.மு.க., நகர் செயலாளர் கண்ணன், பேரூராட்சி தலைவர் மவுசூரியா, காங்., நகர் தலைவர் முகமது காசிம், பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

