/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமிக்கும் டூவீலர்கள்: பயணிகள் பாதிப்பு
/
பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமிக்கும் டூவீலர்கள்: பயணிகள் பாதிப்பு
பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமிக்கும் டூவீலர்கள்: பயணிகள் பாதிப்பு
பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமிக்கும் டூவீலர்கள்: பயணிகள் பாதிப்பு
ADDED : ஜன 19, 2024 04:33 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய பஸ்ஸ்டாண்டில் போதிய இடவசதி இல்லாத நிலையில் வளாகத்திற்குள் நிறுத்தப்படும் டூவீலர்களால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் சந்தைத் திடல் வரை விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. இதனால் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து அனைத்து ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இங்கு பஸ்கள் உள்ளே வந்து வெளியே செல்வதற்கு இடவசதி இல்லை. இந்நிலையில் டூவீலர்களை கண்டபடி பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் நிறுத்துகின்றனர். மேலும் ஆட்டோ, கார், டூவீலர்கள் உள்ளே வருவதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் பஸ்களை தவிர்த்து பிற வாகனங்கள் நிறுத்துவதற்கு போலீசார் தடைவிதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.