/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காலி குடங்களுடன் கிராம மக்கள் மனு
/
காலி குடங்களுடன் கிராம மக்கள் மனு
ADDED : ஜன 23, 2024 04:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: முதுகுளத்துார் தாலுகா கீழமானாங்கரை கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக காலி குடங்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
காத்தாகுளம் ஊராட்சி கீழ மானாங்கரை கிராமத்தில் 100க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு காவிரி கூட்டு குடிநீர் வராமல் மிகவும் சிரமப்படுகிறோம். இது தொடர்பாக மூன்று முறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
குடிநீரை விலைக்கு வாங்கி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே தினமும் குடிநீர் வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

