/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.1500 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி, இடைத்தரகர் கைது இடைத்தரகர் கைது

ADDED : ஜன 23, 2024 04:26 AM

கடலாடி: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் ரூ.1500 லஞ்சம் வாங்கிய வட்டார சமூக நல அலுவலர், புரோக்கர் கைது செய்யப்பட்டனர்.
கடலாடி அருகே கொத்தங்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயதேவி 31. இவர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட சேமிப்பு பத்திரம் பெறுவதற்காக கடலாடி வட்டார சமூக நல அலுவலர் சண்முக ராஜேஸ்வரியை அணுகினார். அவர் ஜெயதேவியிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சப் பணத்தை சாயல்குடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் டீக்கடை நடத்தி வரும் கண்ணனிடம் கொடுத்து விடுமாறு ஜெயதேவியிடம் சண்முக ராஜேஸ்வரி கூறினார். ஜெயதேவி ராமநாதபுரம் ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து ரசாயனம் தடவிய ரூ.1500ஐ சாயல்குடி கண்ணனிடம் ஜெயதேவி நேற்று மாலை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் கண்ணனை கையும் களவுமாக பிடித்தனர். அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் படி வட்டார சமூக நல அலுவலர் சண்முக ராஜேஸ்வரியையும் இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், ராஜேஸ்வரி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.