ADDED : ஜூன் 17, 2025 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரத்தில் டூ வீலர் மீது சரக்கு லாரி மோதியதில் யோகா மாஸ்டர் பலியானார்.
ராமேஸ்வரம் தீட்சிதர்கொல்லை தெருவை சேர்ந்தவர் முருகேசன் 56. இவர் ராமேஸ்வரம் பகுதி வாழும் கலை அமைப்பின் யோகா மாஸ்டராக இருந்தார். நேற்று முன்தினம் இவர் டூவீலரில் ராமேஸ்வரம் திட்டக்குடியில் இருந்து பொந்தம்புளி பஸ் ஸ்டாப் நோக்கி சென்றார்.
அப்போது ராமநாதபுரத்தில் இருந்து இறைச்சி கோழிகளை ஏற்றி வந்த சரக்கு லாரி எதிர்பாராத விதமாக டூவீலர் மீது மோதியது. இதில் முருகேசன் பலியானார்.
ராமேஸ்வரம் டவுன் போலீசார் லாரி டிரைவர் ராமநாதபுரத்தை சேர்ந்த அசாருதீன் 36, என்பவரை கைது செய்தனர்.

